×

அரசு பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி நிதியளித்துள்ள 86 வயது வத்தல் வியாபாரி: நேரில் சென்று பாராட்டிய சாலமன் பாப்பையா

மதுரை: அரசு பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி நிதியளித்துள்ள 86 வயது வத்தல் வியாபாரியை பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா நேரில் சந்தித்து பாராட்டினார். மதுரை தத்தனேரியை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரன் அப்பளம், வற்றல் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 5ம் வகுப்பு வரையே படித்திருந்தாலும் தொழில் செய்து முன்னேறியுள்ள அவர் கல்வி பணிகளுக்கு நிதியை வாரி வழங்கி வருகிறார்.

மதுரை மாநகராட்சி திருவிக பள்ளிக்காக அவர் வழங்கிய ரூ.1 கோடியே 10 லட்சரூபாயில் புதிய வகுப்பறைகள் இறைவணக்க கூடம் கட்டப்பட்டுள்ளது. செல்லூர், கைலாசபுரம் மாநகராட்சி பள்ளியில் வகுப்பறைகள், உணவுக்கூடம், கழிப்பறைகள் உள்ளிட்டவைகளை ரூ.71 லட்சத்து 45ஆயிரம் செலவில் கட்டிக்கொடுத்துள்ளார்.

ராஜேந்திரன் அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து நிதி வழங்கிவருவதை அறிந்த பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவரை நேரில் சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து பேசிய சாலமன் பாப்பையா பணமிருக்கக்கூடியவர்கள் அரசு பள்ளிகளுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். சாலமன் பாப்பையா தாம் படித்த அரசு பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்ட அண்மையில் ரூ.20 லட்சம் நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

The post அரசு பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட 5 ஆண்டுகளில் ரூ.2 கோடி நிதியளித்துள்ள 86 வயது வத்தல் வியாபாரி: நேரில் சென்று பாராட்டிய சாலமன் பாப்பையா appeared first on Dinakaran.

Tags : Salomon Papaya ,Madurai ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி